மௌனமே

ஆயிரம் வார்த்தைகள்
சொல்லாத வலிமை
மௌனத்தின் மொழிகள்
பேசுகின்றன ...
மண்ணில் மலரும்
பூக்களும் உன்
மௌன விழிகளால்
வெட்கப்படுகின்றன ...
இளங்காற்றில் தவழும்
இனிய குயில் நாதமும்
வாயடைந்துபோகின்றன ..

பொறுமையின் அவதாரமும்
உன்னால் ஜெய்த்துவிடுமோ ?..,
கோப அக்கினியை
மௌனத்தின் மொழிகள்
அணைத்திடுமோ ?...
மௌனமே உன்
சிறப்புகள் கோடி ...
அதை அறிந்திடில்
ஏது சச்சரவுகள் ....!

சம்மதம் என்ற
வார்த்தைக்கு நீ
அச்சாணி ...!
தெரியாது என்ற
பதிலுக்கும் நீ
உறைவிடம் ...!
அடக்கத்திட்கும் நீ
அந்தாதி ...!
மௌனமே உனக்கு
முகவரிகளை காலங்கள்
சுமந்து செல்லும் ...!

எழுதியவர் : பச்சைப்பனிமலர் (7-Dec-16, 12:35 pm)
Tanglish : mowname
பார்வை : 949

மேலே