மைவிழி

முகத்திலே இருந்து வந்து
என்னை முட்டி வீழ்த்திவிடக் கூடாது
என்றுதான் கட்டிப்போட்டிருக்கிறாளா
அவள் கண்ணை மைகொண்டு.

என்னுள் பறந்துகொண்டிருக்கிறது
மையால் சிறகு வரைந்த
அவள் இமைகள்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (7-Dec-16, 7:11 pm)
Tanglish : maivizhi
பார்வை : 225

மேலே