பெண்ணை அடிமையாய் எண்ணாதே ஆணாதிக்கமே

தனக்கென்றால் தனித்தீர்ப்பெழுதும் ஆணாதிக்கமே...
உனக்குரிய இலக்கணமறியாயோ???

நானும் பார்க்கிறேன்,
நாளும் பெண்மையை பிழை என்கிறாயே,
நீ உண்மையிலேயே பெண் வயிற்றில் பிறந்தவனா???...

நீ மட்டும் கட்டற்ற காளையாய், கண்டபடி திரிவாய்.
அதையே பெண் செய்தால் கலாச்சாரம் பண்பாடென்று குற்றம் காண்பாய்...

பெண்மையை அடக்கும் முன் உன் ஆண்மையை அடக்கிக் கொள்..

திருவள்ளுவர் கூறிய அடக்கமென்னும் பண்பு பெண்மைக்கு மட்டும் உரியதல்ல,
ஆண்மைக்கும் உரித்தானது தான்..

ஊர்புறணி பேசித் திரியும் முன் உன் புறத்தையும் அகத்தையும் தூய்மை
செய்து கொள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Dec-16, 7:13 pm)
பார்வை : 1307

மேலே