தாயுமானவள் வேண்டும்
எனக்கு முன் தொன்றியவளாயினும் சூது,வாது அறியாதவளவள்.
அவளுக்கு இளையோன் நானொரு கொடுங்கோலன்.
அக்காவை அடித்து அழவைத்து மகிழ்வேன்.
நான் தந்த கஷ்டமெல்லாம் தாங்கிக் கொண்டு,
என் மீது அன்பு காட்டியதில் அவள் என் தாயுமானவள்.
மஞ்சள் நிற பாவாடை, சட்டையில் தெய்வமாகத் தெரிந்தவள், அந்த தெய்வத்தோடே சேர்ந்து விட்டாளே.
அம்மாவாய் இருந்தவளை அம்மை நோய் கொன்று, கொண்டு செல்லுமென நானறியேன்.
அவளிருக்கையில் நாளும் அவளை அழவைத்தவன், இப்போது, அழுகிறேன் தினமும் அக்கா வேண்டுமென..