அன்னையே தெய்வம்---வெண்டளையான் இயன்ற எண்சீர் விருத்தம்
(வெண்டளையான் இயன்ற எண்சீர் ஆசிரிய விருத்தம்)
கண்ணில் வழிந்தோடும் கண்ணீர்கள் நின்று
=====கனவுகளு டைந்திடுஞ் சோகத்தைக் கேட்கும்
கண்ணாய் வளர்ந்திடுங் கிள்ளைகளே யன்று
=====கருவிழிகள் நீந்திடுங்கோ லத்தைக்கொ டுக்கும்...
கண்களாற் பேசிடுங் கண்ணாத்தாட் சிந்துங்
=====கருணையிற்றான் வீசுகின்ற முல்லைகளின் வாசங்
கண்ணாண வன்னைக்கு கோபத்தால் வேண்டா
=====கருணைமிகு பாசத்தாற் பூசித்தல் நன்றே......