உப்பாயி இங்க வா
யார மாமா உப்பாயின்னு கூப்படறீங்க? புதுசா வீட்டு வேலைக்கு சேந்த பொம்பளையா?
@@@
இல்லப்பா உன் அக்காவத்தான் கூப்புட்டேன்.
@@@@
அக்கா பேரு குப்பாயி தானே? உப்பாயி-ன்னு ஏங் கூப்பிட்டீங்க?
@@@@
உங்க அக்கா செய்யற சமையலை சாப்பிட்டிருக்கறயா?
@@@@@
கல்யாண ஆகிறவரைக்கும் அக்கா தாம் வீட்டில சமைக்கும்.
உன்னோட அக்கா குப்பாயி செய்யற சாம்பாரு, ரசம், பொரியல், கூட்டு, தொவையல் எதையும் நாக்குல வைக்க முடியல. கரிக்குது.
@@@@
எங்க அக்கா சமைக்க ஆரம்பிச்ச போதே அம்மா சொன்னாங்க: "அடியே அன்பழகி நீ எப்பவுமே உப்பு போட்டு சமைக்கிறது எதுவா இருந்தாலும் உப்பு கொஞ்சம் கரிக்கற மாதிரி போடு அப்பத்தான் இந்த ஆம்பளைங்களுக்கு சொரணை அதிகமா இருக்கும்".
@@@
"ஆமாம்மா நீ செய்யற சமையலு எப்பவுமே கொஞ்சம் கரிப்பாத்தாம்மா இருக்குது".
@@@
"உங்கப்பா கொஞ்சம் அடங்காம சுத்துவாரு. எங் கூட வர்றபோதுகூட கொஞ்சம் லட்சணமான பொம்பளைங்களப் பாத்தா அவுங்கள மொறச்சு மொறச்சு பாத்துட்டே நாங் கூட வர்றதையும் மறந்துட்டு அவளுக பின்னாடியே போவாரு. அப்பறம் நா அவர வெரட்டிட்டுப் போயி கண்டபடி திட்டினாத்தாண்டி நா அவுரு கூடப் போறதே அவுருக்கு ஞாபகம் வரும். அதுக்கப்பறதாண்டி அதிகமா உப்புப் போட்டு சமைச்சுக் குடுத்து நாலு பேருக்கு கேக்கற மாதிரி திட்டித் திட்டி அவரத் திட்டுவேன். அப்பறந்தான் அவுருக்கு கொஞ்சங் கொஞ்சமா சொரணை வர ஆரம்பிச்சு திருந்தினாரு. அன்பழகி நீ கல்யாணம் பண்ணீட்டு புருசன் வீட்டுக்கு போற நாளிலிருந்து உப்பை அதிகமா போட்டு உம் புருசன உங் கட்டுப்பாட்டிலயே வச்சுக்க"-ன்னு சொன்னாங்க. அக்காவும் "அம்மா உம் பேச்சை சத்தியமா மீறமாட்டேன்"ன்னு கற்பூரத்தை அணைச்சு சத்தியம் பண்ணிக் குடுத்தாங்க.
😢😢😢😢😢😢
ஏப்பா கண்ணப்பா உன்னோட அக்கா குப்பாய நாங் கல்யாணம் பண்ணிட்டதுக்கு எனக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையா? அதுக்கு ஒரு கருப்பாயக் ( ஷ்யாமளாவை) கல்யாணம் பண்ணிருந்தா எனக்கு இந்த தண்டனை கெடச்சிருக்காதுப்பா.
@@@@@
மாமா, அக்கா சமையல கொற சொல்லறத விட அக்கா செய்யற பதார்த்தங்கள ருசிச்சு சாப்பிடப் பழகிக்குங்க. பழகப் பழக எல்லாம் சரியாகிடும்.
@@@@
???????????????