நான் பாடும் மௌனராகம்

நிலவின் ஒளியில் சோலைக் குயிலாய்
நீயும் நானும் பறந்து வந்தோம்...
இரவும் பனியும் இணையும் பொழுதில்
காதல் தேரில் மிதந்து வந்தோம்...
இன்று என்கால்கள் தனிமையில் நடக்குதடா......
உன்நினைவைச் சுமந்து பாதையைக் கடக்குதடா......


உருகும் மெழுகாய் உடலும் எரிய
உலையின் நீராய் நெஞ்சம் கொதிக்க
உன்னைப் பிரிந்து உயிர்தான் வாழுமோ?......
கண்ணீர் வழிந்து கதைகள் சொல்ல
மண்ணில் புதைந்த உந்தன் உடலும்
எழுந்து வந்து என்னை அணைக்குமோ?......
இந்த உலக வாழ்க்கை நோகுதடா......
இதயக் கூடும் இறந்து வேகுதடா......


காயம் பட்டு நெஞ்சம் துடிக்க
கானல் உயிராய் நீவந்து நிற்க
சோகத்தின் விளிம்பில் சோதியாய் எறிகிறேனே......
வாசல் காற்று வந்து வதைக்க
சுவாச காற்றும் உதிரம் குடிக்க
உயிர் வைத்து உள்ளம் சாகுறேனே......
ஓரிரவில் நீதான் உறக்கம் கொண்டாயடா......
ஆரிருள் என்னை சூழ்ந்து கொண்டதடா......

எழுதியவர் : இதயம் விஜய் (15-Dec-16, 8:25 pm)
பார்வை : 383

மேலே