உயிர் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பு என்னும் பெயரில்
ஆசைகள் ஆனந்தம் கொள்ள
இருமனம் இனைந்து
ஈருடல் ஒன்றாகி
உயிர்கள் ஒன்று சேர்ந்து
ஊர்வலம் வர
எத்திசை மக்களும்
ஏனையம் பேச
ஐம்பூதங்கள் ஆசிர்வதிக்க
ஒற்றுமையில் உள்ளங்கள்
ஓர் நொடி பிரியாமல்
ஔதாரியம் கொண்டு
காலம் எல்லாம் காதலில் மூழ்கி
உன்னுடன் வாழ வேன்டும்! அன்பே
ஓர் உயிர் காதல்!!!