நீயாகிய நான்
நீயாகிய நான்
எனக்கு தெரியும்
உன்னால்
உன் உயிரைவிட
நேசிக்கப்பட்ட நான்
இப்பொழுது
உனக்கு முக்கியமானவர்கள்
பட்டியலில் இல்லை
எனக்கு தெரியும்
எல்லா நேரங்களிலும்
ஒருவருக்கு
முக்கியமானவராக
ஒருவரே
இருக்க முடியாது
எனக்கு தெரியும்
பருவங்கள் மாற
உருவங்கள் மாற
உறவுகள் மாறும்
முக்கியமானவர்கள்
பட்டியலும் மாறும்
ஆனால்
என்னுடைய
முக்கியமானவர்கள்
பட்டியலில் யாருமே இல்லை
நீயாகிய நான்