என்னவருக்கு
நான் நேசித்ததும் நேசிப்பதும் நேசிக்கப்போவதும்
உன்னைத் தான்...
உன்னை மட்டும் தான்...
உன் அழகையோ...
பணத்தையோ...
புகழையோ...அல்ல...
உன் மீது வைத்த அன்பிற்கு எல்லையே இல்லை...
உனக்காகவே இந்த உயிர்...
உன்னைத் தவிர வேறு யாருக்கும் சொந்தம் இல்லை...
நீ இறக்கும் நொடி வரைக்கும்
உன்னுடன் தான் இருப்பேன்
உன்னை ஒரு நொடியும் அநாதையாக விடமாட்டேன்...
நீ இறக்கும் நொடி
உன் கரம் பற்றியபடி
உன்னோடே இறந்து போவேன்...
உன்னை ஒரு நொடியும் அநாதையாக விட மாட்டேன்...
நான் இருக்கும் வரை
உன் கண்ணில் கண்ணீரே வராமல் பார்த்துக் கொள்வேன்...
நீயும் நானும்
ஒன்றாகவே இறக்க வேண்டும்...
நான் இல்லாமல் நீ தவிக்கக் கூடாது...
என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியாது...
உன் மடியில் உனக்கு முன் கண் மூட ஆசை தான்...
ஆனால் உன்னை தனியே தவிக்க விடவோ...
இந்த உலகத்தில் விட்டுச் செல்லவோ...
துடிக்கவிடவோ ...
நினைத்தாலே பதைக்கிறது...
நீ என் மடியில் கிடக்க...
நான் உன் மார்பில் விழ...
இருவரும் இறந்தோம்
என்பதை...
இருவரும் அறியாமலேயே
இணைந்து இறந்திடுவோம்...
இருந்திடுவோம்...
ஒன்றாகவே அன்யோன்யமாக வாழ்ந்தோம்...
ஒன்றாக செல்கிறோம்...
இருவரும் கரம் கோர்த்து
கண் இமைக்காமல்
ஒருவரை ஒருவர் பார்த்தபடி
மேலே வானில் பறக்கிறோம்...
ஒருவர் மீது
ஒருவர்
தீராத அதே அதீத காதலோடு
இதயம் இணைத்து
விண்ணுலகில் வாழ
மங்கையிவள்
மணாளன் உன் மடியில் துயில் கொள்கிறேன்...
என் உயிருக்கு சமர்பணம்
என்னையும் சேர்த்தே...
~ பிரபாவதி வீரமுத்து