இன்னுயிரைக் கொன்றாய்

கருவிழிகளில் அஞ்சனம் தீட்டி
கரங்களில் வளையலும் பூட்டி
கருமேக கூந்தலதில் பூச்சூட்டி
காரிகையே இன்ப மணவாட்டி
இதயத்திலே நின்றாய்! – என்
இன்னுயிரைக் கொன்றாய்!
தென்றலும் மலர்தழுவும் போது
தாரகைநீ மான்விழி மாது!
நின்றாயே காவினின் ஓரம்
நினைவிலே இதழ்முத்த ஈரம்!
தந்து வென்றாய்! – நான்
தவிக்க சென்றாய்!
முறுவலையே இதழோரம் சிந்தி
முகத்தினிலே நாணமும் ஏந்தி
பருவநிலா என்னருகே வந்து
பலாச்சுளை இதழ்கள் தந்து
எவ்விடம் சென்றாய் –
அவ்விடம் வருவேனடி!
கலகலவென நகைக்குங் காலை!
கன்னிநீ வரைவாய் ஓலை!
சிலநாளே சேர்ந்தாய் மாலை
சிலையேநீ பிரிந்த வேளை

என்றன் இன்னுயிர்தான்
இருந்திடுமோ மண்ணில்


---கே. அசோகன்

எழுதியவர் : கே.அசோகன் (20-Dec-16, 9:15 pm)
பார்வை : 171

மேலே