காதல் போர்

அன்பே...
உன் சிரிப்பும் பார்வையும்
மிகப்பெரிய ஆயுதங்களாக உன்னிடத்தில் இருக்கும் நிலையில்
நான் எந்த ஆயுதத்தை வைத்து
உன்னிடத்தில் போர் தொடுப்பேன்
இந்த காதல் போரில் வெல்ல...

என்னிடம் உள்ளது ஒரே ஒரு
தடுப்பாயுதம் அது என் இதயம் மட்டுமே...

எழுதியவர் : செல்வமுத்து.M (21-Dec-16, 10:43 am)
Tanglish : kaadhal por
பார்வை : 101

மேலே