உயிருக்குள் மழை

இதய முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சி உனக்காய் வடிக்கும் வரிகளின் கூடலில் துளிர்க்கும் காதலின் அர்த்தங்களின்
ஆழங்கள் மூழ்கிப்போனது

மைத்துளிகளின் சேர்க்கையால் உதிர்ந்திடும் உணர்வுகளைக் கோர்த்து
வரைந்தெடுத்த ஓவியம் ஒன்று
புன்னகைக்கிறது உன் கரங்களில்

விழிகள் மெளனிக்கும் மொழிகள்
நனைகிறது உன் வார்த்தைகளில்
இமையோர ஈரங்கள் இன்று
உன் வருடலுக்காய் ஏங்குகிறது

உயிரணுக்களின் உறுஞ்சலில்
காதல் அணுக்களின் ஆர்ப்பாட்டம்
உன் சம்மதத்தை கொண்டு
சமாதானம் செய்திடு அன்பே

உள்ளத்தை மடித்து கடிதமாய்
அனுப்பிவிட்டு இதயத்துடிப்பிற்காய்
காத்திருக்கும் இவனுக்கு உன் இதயத்தை பதிலாய் தந்துவிடு

எழுதியவர் : சப்னா செய்ன் (22-Dec-16, 12:08 pm)
Tanglish : uiirukul mazhai
பார்வை : 312

மேலே