புனித பயணம்
![](https://eluthu.com/images/loading.gif)
புனித பயணம்
ராமேஸ்வரம் ரயிலில் சன்னலோர
இருக்கையில் இடம்பிடித்து அமர்ந்த
சாமியின் மனம் 'அவனது அம்மாவை
புனித பயணமெனக் கூறி
இராமேஸ்வரம் அழைத்துச் சென்று
முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும்
திட்டத்தை செயல்படுத்த
துனிந்திருந்தது '. ரயில்
கிளம்பியவுடன் பேச்சைத் தொடங்கிய
சக பயணி 'தான் ஒரு கடவுளின் தீவிர
பக்தன் கடவுளின் மீதான பற்றால் என்
பெற்றோர் குடும்பம் குட்டியென
அத்தனையையும் துறந்து
இறைசேவை செய்ய புனித பயணம்
செல்கிறேன்' என்றதை கேட்ட சாமி
கண்ணில் தெரியும் சொந்தங்களை
தவிக்க விட்டுவிட்டு கண்ணில் தெரியா
கடவுளுக்கு சேவையாம் என்று
நினைத்தபடி திரும்ப
எதிர் இருக்கையில் தன் அம்மா
வயதிருக்கும் பாட்டி ஏதோ சொல்ல
முடியாத வேதனையுடன் கண்ணீர்
வடிய அமர்ந்திருக்க.. அவரின் மகளோ
'தான் மதுரை சென்று ஒருமணி
நேரத்தில் மீண்டும் திண்டுக்கல்
திரும்ப வேண்டியிருப்பதா ல்
திண்டுக்கல்லில் பாட்டியை
நடைபாதையில் அமர செய்யும் படி'
உதவி கேட்கஉதவ முன்வந்த
யாத்திரிகர்.. நடைபாதையில்
பாட்டியை இறக்கி ஒரு மரத்தடியில்
அமர வைத்து திரும்ப.. கண்ணயர்ந்த
சாமி மறுநாள் முதியோர் இல்லதில் தன்
தாயை சேர்க்க ஆரம்பகட்ட
பணிமுடித்து மீண்டும் அதே ரயிலில்
திரும்ப.. திண்டுகல் நடைபாதைதில்
அந்த பாட்டி கையேந்தியாய் இருப்பதை
கண்டதும்.. தன் தாயின் முகம்
நினைவில் வர.. தன் தவறை
உணர்தவனாய் வீட்டிற்கு சென்று தன்
தாயின் காலடியை தேடிய சாமியின்
கண்கள் புனிதமானது.. குழாயடியில்
பேரண் மீது தெளித்து விளையாடிய
நீர்துளிகள் தந்த மகிழ்வால்
#மூர்த்தி