முரண்கள்

என் கண்ணும் உன் கண்ணும்
ஏனோ சந்தித்து கொள்ள மறுக்கின்றது ?
பார்வையை திசை திருப்புவதிலேயே குறியாயிருக்கிறது
உள்ளுக்குள் ஏதேதோ ரசாயன மாற்றங்கள்
வெளியே எதை பற்றியோ பேசி கொண்டிருக்கிறோம்
நீயோ பார்க்க முடியாமல் கிறுக்கி கொண்டிருக்கிறாய்
நானோ பேச முடியாமல் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஏனடா இந்த அவஸ்தை ?
தேவையா ?
விட்டு விட்டு போய்விடு
விட்டு விட்டு எங்கே போவது
நினைவுகள் என்றும் அழியாதவை
அழிக்க அழிப்பான் தருகிறாயா ?
இருந்தால் எல்லாவற்றையும் அழித்துவிடு
நீ யாரென்று நானும்
நான் யாரென்று நீயும்
கேட்டு கொள்ளலாம்
மறுபடியும் இதற்குள் மாட்டிக்கொள்ளாமல் !!!

எழுதியவர் : ஜெயந்தி ஆ (25-Dec-16, 8:41 pm)
பார்வை : 65

மேலே