டைரி
"டைரி"
யாரையும் நம்ப முடியா உலகில்
நான் நம்பிய ஒன்று!
என்னைச் சுற்றி எத்தனை
உறவுகள் இருந்த போதிலும்
என் உணர்வுகள் அனைத்தையும்
உன்னிடம் மட்டுமே காட்டினேன்,
யாரும் அறிய முடியா என்னை
அறிந்த
உயிற்ற ஒரே உயிர் நீ மட்டுமே,
உன்னிடம் உள்ள
ஒவ்வொரு வரியிலும்
என் வாழ்வின் வலிகள்
நிறைந்து உள்ளது,
காகிதமாக நீ இருந்த போதிலும்
என் வாழ்வின் கவலைகளை
உன்னிடம் மட்டுமே காட்டினேன்,
என் வாழ்வில் உள்ள
வலி என்னும் கறைகள்
என்னை நேசிக்கும் வரை
என் எழுதுகோளின் மை கறை
உன்னை நேசித்து கொண்டிருக்கும்...
..........................................................
இப்படிக்கு
உன் நண்பன்
பிரியன் பிரசாந்த்