சுனாமி
கடல்நீர் கரைதாண்டிக் கற்பித்தக் கோர
நடனத்தின் பாடத்தை நெஞ்சில் – படமாக்கித்
தொங்கவிட்டோம். துன்பத் தொடர்கதை முற்றில்லா
வங்கிக் கடனாய் வருது.
கூட்டுக் குடும்பங்கள் கொண்ட மகிழ்ச்சியை
வேட்டுவைத்துச் சாய்த்து விளையாடிப் – பாட்டுப்
படித்தக் கடல்கோரம் பத்தாண்டு சென்றும்
முடியாத வேதனை முட்டு.
கடல்நீர் விளைவித்தக் கண்ணீர்க் குளத்தில்
உடல்நனைத்தும் உபாதை ஓய – திடல்புதைத்த
மக்கள் திரட்சி மனதில் நிலைகொண்ட
சிக்கல் அகற்றா சிதைப்பு.
*மெய்யன் நடராஜ்