உண்மை
உயர்ந்தவர் என்பது ,
உடலின் வளர்ச்சியல்ல,
உள்ளத்தின் மலர்ச்சி.
தலைமை என்பது ,
தனிமையல்ல,
தகுதி காக்கும் பயிற்சி.
ஆளுமை என்பது
அடக்கத்துள் அடக்கம்.
அநியாயத்திற்கு அடங்கி போதல்
மாற வேண்டிய பழக்கம்.
உண்மைக்கு மாறாக பேசுபவர்,
சொன்னதை மாற்றி, மாற்றி பேசி,
தனக்கென தனி அணி சேர்ப்பர்.
உண்மைக்கு ஒரு சொல்,
பொய்மைக்கு பல வேஷம்.