காதல் எது காமம் எது
மலர் தேன் பருகி
மலை வண்டு பறந்தால்
மது மட்டும் நோக்கம்
அது அதை மட்டும் நோக்கும்
தீண்டுகின்ற தென்றல்
சீண்டிவிட்டு செல்லும்
மலர் தேகம் வெல்லும்
மீண்டும் திரும்பிடாது கொல்லும்
பறிக்க வந்த வண்டையும்
பறந்து வந்த தென்றலையும்
தேடுகின்ற மலரே
தேன் அற்று நீ கிடந்தாலும்
மணம் அற்று நீ பிறந்தாலும்
காவல் இருக்கும் ஒன்றுன்டு
காதலோடு அது உண்டு
உனக்காக பிறந்ததம்மா
உன்னோடே கிடக்குதம்மா
காணாது நீ போனாலும்
காத்துக்கொண்டு இருக்கிறது
சற்றே கவனி
கூர் முனை கொண்ட முள் ஒன்று
கூறிக்கொண்டே இருக்கிறது
காதல் எதுவென்று