வாழ்க்கை

மனிதன்
**********
இழந்த காலத்தில் இருக்கின்றான்
ஹா ஹா...
இல்லை இல்லை
இறந்த காலத்தில்
இல்லை என்றால்
வருங்காலத்தை எண்ணி பயம் கொள்கிறான்...

வாழும் இந்த நொடி
இந்த பிரபஞ்சம்
இந்த மழை
இந்த பனி
இந்த இசை
இந்த இருக்கை
இந்த ஜன்னலோர சிலு சிலுவென்ற காற்று
இந்த மலர்
அந்த மலர் வாசனை...
பாதத்தை வருடும் இந்த புல்...
பக்கத்தில் அமர்ந்து சிரிக்கும் மழலை...
வெயிலுக்கு இதமாய் நிழல் தரும் மரம்...
மழைக்கு தனையே குடையாக்கி
அணைத்துக் கொண்ட தாய்...
இந்த மழைத்துளி
அது தரும் மண் வாசனை
இந்த பட்டாம்பூச்சி
ஓடி பிடித்து விளையாடும் மழலை
கீழே விழுந்தது போல் நம்ப வைத்து
அருகில் வந்ததும்
பிம்பிலிக்கா பிலாபி என்று விளையாடும் விளையாட்டு...
சொல்ல சொல்ல
முடியாதது
இப்படி நிகழ்காலம்...
தினமும் முற்று பெறாத அழகான காலம்

இதில் மனிதன்
தன் அழுத முகத்திற்கு மேலே
பொய்யாக சிரிப்பை வைத்துக் கொள்கிறான்...
தன் சிரித்த முகத்திற்கு மேலே பொய்யாக அழுகை வைத்துக் கொள்கிறான்...

அழுகை வந்தால் அழுது விடுங்கள்...
அடுத்த நொடியே சிரிப்பு வரும்
அப்பொழுது சிரித்து விடுங்கள்...

வாழ்க்கை சுவாரஸ்யமானது...

சிலு சிலு காற்றில்
பேருந்தின் ஜன்னல் இருக்கையில்
அமர்ந்து
உலகை ரசித்துக்(பார்த்துக்) கொண்டே
இளையராஜா பாடலை கேட்பது போல் தான் வாழ்க்கை...

நாம் போகும் பாதையில் பாடல் மாறிக் கொண்டே இருக்கும்...
அதை அந்த நேரத்தில் ரசித்திட வேண்டும்...

இறங்கும் நேரம் வரும் போது தான்
அருமையான பாடலை போட்டு விடுவார்கள்...
எனக்கா எப்படி இருக்கும் தெரியுமா...
இவ்ளோ நேரமா மொக்க மொக்கயா போட்டுட்டு இப்ப போட்றாங்களேனு.

விடுவனா நானு
என் mobile எடுத்து இளையராஜா பாட்டு வச்சி கேட்டுட்டு வருவேன்...

நமக்கு பிடிக்காத இடத்தையும் பிடித்த இடமாக மாற்றிக் கொள்ள வேண்டும்...
அப்படி மாற்றுவது மிக எளிது...
உன் அருகில் எப்பொழுதும் All izz well என்று எடுத்துக் கொள்கிற நட்புக்களை/ உறவுகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்...
கூடவே இளையராஜா...
மறக்காமல் ஜன்னல் ஓர சீட்டு
தெம்மாங்கு காத்து
எப்பயும் நலம் விசாரிக்கற கிராமத்து மக்கள்...
முக்கியமா பூவ பாத்து ரசிக்கிற
மணத்தை ரசிக்கிற
மழலை மனம்...

பூவை கொய்வதும்
இச்சையோடு சுவாசிப்பதும்
இதில் வராது...
அது கொடூர குணம்....

மொத்தத்தில் நேற்று என்ன நடந்தது
நாளை என்ன நடக்கப்போகிறது
என்பதெல்லாம் தெரியாத
குழந்தையா இன்றைய நாளை மட்டும் ரோஜா மலர் முகத்தில் பனித்துளி போல் ரசிக்க உள்ளிருந்து வர வேண்டும்...
அது யாரும் கற்றுத் தருவதில்லை...

எப்படி சொல்வது...

குழந்தை
ஒரு பொம்மை வச்சிருக்கு.
அது வச்சிருந்த பொம்மை உடைஞ்சிடுச்சி...
செமயா உருண்டு பிரண்டு அழும்...
அப்ப அது கைல சாக்லேட் எடுத்துட்டு போய் கொடுத்தா
செமயா அழகாயிட்டு சிரிக்கும்...

நாளைக்கு இத சாப்டா
இருமல் வரும்
பல் சொத்தையாகும் இதை பற்றிய கவலை ஏதும் சிறிதும் இல்லாமல்

அழகா சிரிச்சி...
தன் மேல எல்லாம் சாக்லேட்ட பூசி
அந்த தேவதை அழகா இருக்கும் போது
அந்த குழந்தைய தூக்கி வச்சி கொஞ்சற அந்த வேளை
சொல்லவே வார்த்தை இல்லை...
அப்படி ஒரு சிலிர்ப்பு
அது தான் வாழ்க்கை...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Dec-16, 9:59 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 151

மேலே