நீ காதல் வயப்பட்டால்

கண்கள் பேசும் மொழி புரியும்
நீ காதல் வயப்பட்டால் ...
கவிதை அது தானாய் உதிக்கும்
நீ காதல் வயப்பட்டால் ..
மனம் எப்போதும் சிறகடிக்கும்
நீ காதல் வயப்பட்டால்
ஓர் அச்சம் உன்னை அழுத்தி நிற்கும்
நீ காதல் வயப்பட்டால்
பசி தூக்கம் மறந்து போகும்
நீ காதல் வயப்பட்டால்
காலை மாலை குழம்பி போகும்
நீ காதல் வயப்பட்டால்
தனிமை அது சுகமாய் சுமையாகும்
நீ காதல் வயப்பட்டால்
புலம்பல் அதிகமாகும்
நீ காதல் வயப்பட்டால்
வெற்றி தோல்வி இயல்பாகும்
நீ காதல் வயப்பட்டால்
எது நடப்பினும் எதிர்த்து நிற்பாய்
நீ காதல் வயப்பட்டால்
ஏழு உலகமும் உனக்கடிமை என நினைப்பாய்
நீ காதல் வயப்பட்டால்
சொர்க்கம் என்றும் உடன் இருக்கும்
நீ காதல் வயப்பட்டால்
சொல்லும் சொல் முழுமை மறக்கும்
நீ காதல் வயப்பட்டால்
விடை தேட மனம் துடிக்கும்
நீ காதல் வயப்பட்டால்
எது கேள்வி என மறக்கும்
நீ காதல் வயப்பட்டால்
உன்னை தொலைக்க முழுதும் துணிவாய்
நீ காதல் வயப்பட்டால்

எழுதியவர் : ருத்ரன் (27-Dec-16, 10:33 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 203

மேலே