உண்மையைத் தேடுங்கள்
பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணே அறிவாரென்பது போல்,
ஒரு மனிதனின் மனதில்
உள்ள எண்ணங்களை,
இன்னொரு மனிதனின் மனதாலும் அறிய இயலுமென்றால் பலர்
அதெல்லாம் பொய்யென்று விலகிச் செல்கிறார்கள்...
அது பொய்யென தங்களால் நிரூபிக்க இயலுமா??...
உண்மை எது?, பொய் எது? என்பதை அறிவதில் பிறர் எடுத்துரைக்கும் விளக்கங்களை நான் ஏற்பதில்லை..
என்னுள் உள்ள பகுத்தறிவானது,
அதைப் பகுத்து அறிகிறது...
இயேசு கிறிஸ்துவால் பைப்பிளை எவ்வாறு முதன் முதலில் போதிக்க முடிந்தது???...
பகவத்கீதை எவ்வாறு அருளப்பட்டது???...
திருக்குரான் எப்படி அருளப்பட்டது???...
உலகில் இன்னும் பல காப்பியங்கள் எவ்வாறு எழுதப்பட்டன???...
இவற்றிற்கான பதில்களை தங்களால் சொல்ல இயலுமா???...
இதே கேள்விகளை என்னிடம் கேட்டால்,
அது மனிதனுள் இருந்து ஆட்சி செய்யும் ஞானமே செய்கிறதென்பேன்...
அந்த ஞானம் எவ்வாறு
கிடைக்கிறது?? என்ற
கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால்,
அந்த ஞானம் எல்லாரிடத்திலும் இருக்கிறது...
ஆனால், அதை எல்லாரும் உணர்வதில்லை என்பேன்...
சிலர் சிந்திப்பதே இல்லை.
சிலர் பிறரை சிந்திக்கவே விடுவதில்லை..
பலர் தங்களின் கவிதைகளில் எழுதுகிறார்கள், மனம் பேசுகிறதென்று..
ஆனால், தாங்கள் தங்களின் மனதிடம் பேசியதுண்டா? என்று கேட்டால் இல்லை என்பார்கள்..
(தொடரும்...)