பெண் கல்வி

நான் இவ்வுலகில் மலர்ந்தேன்
என்னைப் பெற்றவர்கள் மனம் வாடியது

உற்றார் உறவினர்கள் அவர்களை
சாடியது

எனக்கும் என்னுடன் பிறந்தவனுக்கும் அவர்கள்
அன்பில் வேறுபாட்டை காட்டியது

பள்ளிக்கு சென்ற என்னை அடுப்பூத
வைத்தது

வயது வந்த பருவத்தில் எனக்கு கழுத்தில்
தாலி ஏறியது

விபரம் அறியா பருவத்தில் எனக்கு
குழந்தைகள் பிறந்தது

இது தான் திருமணம் என்று புரிவதற்குள்
என் கணவன் குடித்து குடித்து
என் தாலி அறுந்தது

படிப்புமில்லா கணவனுமில்லாமல் என்
வாழ்க்கை தெருவில் நின்றது

கஷ்டப்பட்டு உழைத்தேன் என் பெண் குழந்தை
சந்தோசமாக பள்ளிக்கு சென்றது.....

பாகா
follow my blog to see my all poems
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
thank you for your support

எழுதியவர் : பாகா (28-Dec-16, 8:41 am)
சேர்த்தது : பாகா
Tanglish : pen kalvi
பார்வை : 253

மேலே