உண்மையைத் தேடுங்கள், பாகம் 2

உடலுறுப்புகள் மற்றும் ஐம்புலன்களின் சக்திகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவையாகவே இருக்கின்றன...

கண்ணென்றால் ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையே காண இயல்கிறது..
காதென்றால்
ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குள்
ஒரு குறிப்பிட்ட அளவுக்குட்பட்ட ஒலியைதான் உணர இயல்கிறது.
இவை போன்றே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுகின்றன வாய், மூக்கு, கை, கால் போன்ற உறுப்புகளும்....
இவற்றின் செயல்பாடுகளில் திருப்தி அடையும் மனிதர்கள், தங்களுடைய ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை உபயோகிப்பதில்லையே...

பகுத்தறிவு எல்லையற்ற சக்தியுடையதே..
அது மனமென்னும் அரசாட்சியோடு தொடர்புடையதே...
மனதை எவ்வெண்ணங்கள் ஆள்கின்றனவோ,
அதன் படியே மனிதனுடைய பகுத்தறிவும் வேலை செய்கிறது...

உண்மையை உணர்ந்தாலே தெரியும்,
ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும்
ஒரு இறைதூதன் இருக்கிறானென்பது....

பகுத்தறிவுள்ள மனிதர்களே! எம்மோடு
புறப்படுங்கள் மொழி, நாகரீகம் தோன்றாத காலத்திற்கு...
அக்காலத்தில் மனிதன் மிருகமாகத் தோன்றி,
மிருகமாகவே வாழ்ந்தான்...
அப்போது, கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனதில் உதித்தன எழுத்துகள்..
அவற்றில் இருந்து வார்த்தைகளும் உதயமாகி, பகுத்தறிவுத் தூண்டலால் பேசக் கற்றுக்கொண்டான்...
மொழி தோன்றியதும்,
மனிதனுடைய மனதில் நாகரீக எண்ணங்கள் தோன்றின..
அப்போது, அவனது பகுத்தறிவும் வளர்ச்சியடையப் பெற்றான்...

இன்று நாம் தொலைதூர தகவல் தொடர்பு, மருத்துவம் மற்றும் அறிவியல் போன்ற எண்ணற்றத் துறைகளில் கண்டுள்ள வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது இந்த பகுத்தறிவு...

இன்றையக் காலக்கட்டத்தில் நாம் தொழில்நுட்பங்களை பல நூல்களைக் கொண்டு கற்று அறிகிறோம்...
ஆனால், அறிவியல் தோன்றாத காலத்தில் அறிவியல் நூல்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை..

கற்களை உரசி தீ மூட்டி உணவு சமைத்ததில் இருந்து,
மின்னல் சக்தி கண்டு மின்சாரம் உற்பத்தி செய்தது வரை முழுவதும் பயன்பட்டது,
மனிதனுடைய பகுத்தறிவு தானென்றால் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை...

அதோடு நின்று விட்டதா இந்த பகுத்தறிவின் பங்கு?.
இன்றைய காலங்களிலும் அறிவியல் நூல்களைப் படித்தால் மட்டும் போதாது.
அதை பகுந்தறிந்து செயலாற்ற பகுத்தறிவு வேண்டும் என்பதே சத்தியம்...
எத்துறையினை எடுத்தாலும் பகுத்தறிவின் ஆளுமைக் காண முடிகிறது...

மனதில் தோன்றிய எண்ணங்களைப் பகுத்தறிவால் ஆராய்வதாலேயே
புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன...

அடுத்து பகுத்தறிவை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு உபயோகிக்கலாம்??? என்ற கேள்வியால் தங்களின் சிந்தனையைத் தூண்டிப் பயணம் தொடரும்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Dec-16, 11:25 am)
பார்வை : 454

மேலே