காதல்

குட்நைட் சொல்ல அழைத்து... குட்மார்னிங் வரை சொல்ல வைக்கும் மந்திர சக்தி கொண்டது இந்தக் காதல்...
பேசியது எதுவுமே நினைவில் இல்லாது... பேசிக் கொண்டே இருக்க வைக்கும் இந்தக் காதல்...
உனை மறந்து நீயும், எனை மறந்து நானும்..நம்மைப் பற்றிய நினைவிலேயே நாட்களைக் கடத்திச் செல்லும் வல்லமை கொண்டது இந்தக் காதல்...
முட்டி மோதி, அழுது, சிரித்து, பறந்து, விழுந்து, குழைந்து, இரும்பாகி நிற்க வைக்கும் இந்தக் காதல்...
உடல் மட்டும் பூமியில் இருக்க... மனம் முழுவதையும் நிரப்பிக் கொள்ளும் இந்தக் காதல்..
உலகில் காதல் மட்டுமே முக்கியம் என மயங்க வைக்கும் இந்தக் காதல்..

எழுதியவர் : dilagini (28-Dec-16, 11:49 am)
சேர்த்தது : நிலா ரசிகை
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே