காதல்
காதலித்துப்பார்...
************************
முதலில் நேரம் போவதே தெரியாமல் பேசுவோம்,,,
பிறகு பேசுவதற்கு சந்தர்ப்பம் தேடுவோம்,,,
ஒருவர் பேசுவதை ஒருவர் ரசிப்போம்,,,
ரகசியங்கள் அத்தனையையும் பரிமாறுவோம்...
சந்திப்புகள் ஒவ்வொன்றும் சாமியாகும்,,,
சங்கடங்கள் மறைந்து போகும்,,,
பரிசு பொருட்களாய் குவிப்போம்,,,
பிறந்தநாளை திருவிழாவென நினைப்போம்,,,
நண்பர்களை மறப்போம்,,,
உறவுகளை வெறுப்போம்,,,
தனிமையை உருவாக்குவோம்,,,
இனிமைகளை நினைத்து சிரிப்போம்,,,
காலங்கள் கடந்ததும்
கடமைகள் நினைவுக்கு வரும்,,,
காதலில் இடைவெளி விழும்,,,
கரிசனைகள் குறையும்,,,
காத்திருப்பு நீடிக்கும்,,,
அழைப்புகள் அன்றொரு நாளாய்,,,
சந்திப்புகள் கேள்விக்குறியாகும்,,,
கண்ணீரின் நினைவு வரும்,,,
உறக்கம் தொலையும்,,
வாழ்க்கை வெறுக்கும் ,,,
தனிமை கொல்லும்,,,
நினைவுகள் மட்டுமே துணைவரும்,,,
மீண்டும் வெறுமையாவாய்,,,
காதலித்துப்பார்....