மௌனம் பேசுமா
காதல் தனலில் வேகிறேனடி...
சாம்பலாகும் முன்பாவது உன்
மௌனத்தை பொசுக்கி
என்னை காதல் மழையில் நனையவைப்பாயா???
இந்த பொல்லாத காதல்
என்னையும் விட்டுவிடவில்லை...
எப்படியோ தேடி விசாரித்து சாவுகாசமாய் வந்து ஒட்டிக்கொண்டது
என் அனுமதியின்றி...
நீ என்னை கடக்கின்ற
ஓர் நொடிக்காக
என் நேரத்தையெல்லாம் விரையமாக்கி நடுதெருவில் தவிமிருக்கிறேனடி- வரமாக
உன் மௌனத்தை உடைதெரிவாயா???
என் தமிழ் மொழியில் வார்த்தைகளுக்காக பஞ்சம்...
உன் உதட்டில் இருந்து வெளிப்பட அவைகளும் கெஞ்சும்...
அதில் அலசி ஆராய்ந்து "சம்மதம்" என்ற சொல்லை தேர்ந்தெடுத்து
என் உயிருக்கு
மோட்சம் அளிப்பாயா???
எத்தனை நாட்கள் தான் கண்களாலே காதல் பேசி...
ஓரப்பார்வையால் மெல்ல உரசி காதலிக்க...
உந்தன் மௌன பாஷை சிதறுமா???
காதல் நோய் என் ஒவ்வொரு செல்லையும் அரித்து
உடலெங்கும் பரவுகிறது... 'முற்றிவிட்டது' என்று எல்லோரும் ஏசுகிறார்கள் என்னை...
என் நோய் தீர உன் வாயை
திறந்து பேசுவாயா???
சாவியை தொலைத்த இடம் மறந்து
மௌன பூட்டுடன் திரிகிறாய்...
கள்ள சாவியேனும் கொண்டாவது அதை உடைத்தெரியாமல்
என் உடல் வேகாதடி...
ஊரரிய வழியும் என் காதலை துடைக்க மறந்து தவிக்கிறேன்...
உன் தொண்டை குழியில் சிக்கிக்கொண்ட எனக்கான வார்த்தைகள் விடுதலையாகுமா??? என்று இமையசைக்காமல் காத்திருக்கிறேனடி...
அந்த ஆண்டவனுக்கு ஆயிரம் விரதம் இரு...
ஆனால்,
இந்த காதல் இறைவனுக்கு மட்டும் மௌன விரதம் வேண்டாமே!!!
இதை தடை செய்ய நான் கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்திருக்கிறேனடி...
மௌன காதலுக்கு இரையாவது நானே கடைசியாய் இருக்கட்டும் என்ற அக்கரையில்...
நம் காதல் போர்களத்தில் இனிமேலும் மௌன போர் வேண்டாம்...
உடைதெரி அன்பே!!!
எனக்காக...
உன் ஒரு வார்த்தைக்காக
என் ஓராயிரம் ஜென்மங்களை காணிக்கையாக்கிறேன்...
கல்லறை பாதையில்தான் நடைபயிற்சி செய்கிறேன்...
உன் மௌனமான
சம்மதத்தை விடுத்து,
என் மௌன எதிரியை கொன்று...
இதழ்களின் துணையோடு "பிடித்திருக்கு" என்று
சொல்ல வா உயிரே...
என்னுயிர் சமாதியில் இணைவதற்குள்ளாவது
வந்து விடு...
காத்திருக்கிறேன்...