ஒரு துளி
வினையோடு வியர்வை வித்து
விளையாட்டாய் விடியும் வாழ்வு
கசிந்திடும் ஒவ்வோர் துளியும்
ஆனந்தக் கண்ணீர் தளமாய்
எதிரிலே மறையும் மேகம்
இவரிடம் சேர்க்கும் குளுமை
முகமல்ல தேகம் முழுதும்
தினம்தினம் உண்டாக்கும் தூரல்
நனைகின்ற பொழுதும் சொல்லும்
உழைக்கின்ற உணர்வே துளியாய்....
-இப்படிக்கு முதல்பக்கம்