காதலன் காதலி

அவன் நிலமானான்,
அவனை இறுகப்பிடிக்கின்ற
அவள் வேரானாள்...
அவன் வானானான்,
அவனை மேலும் அழகுபடுத்த
அவள் நிலவானாள்...
அவன் கனவானான்,
அவனுக்கு உயிருட்டி
அவள் நிஜமானாள்...
அவன் கவிதையானான்,
அவனது ஒவ்வொரு எழுத்திலும்
அவள் அர்த்தமானாள்...
அவன் கடலானான்,
அவனில் வற்றாத வரம் பெற்று
அவள் நீரானாள்...
அவன் இரவானான்,
அவனிலே தொலைந்துவிட
அவள் இருளானாள்...
அவன் பாதையானான்,
அவனை முத்தமிட்டே பயனிக்கும்
அவள் பாதமானாள்...
அவன் கண்ணீரானான்,
அவனை முதலில் துடைக்கும்
அவள் கரங்களானாள்...
அவன் காற்றானான்,
அவனுக்கு வளைந்து கொடுக்கும்
அவள் மரமானாள்...
அவன் மொழியானான்,
அவனுக்கு கர்வ பெருமை சேர்க்க
அவள் தமிழானாள்...
அவன் உயிரானான்,
அவன் ஒவ்வொரு செல்லிலும் பூத்து
அவள் காதலானாள்...

காதலின் இறுதியில்,
அவன் மேகமாய்
விலகி சென்றான்...
அவள் மழைக்கு போட்டியாய்
கண்ணீர் வடித்தாள்...

எழுதியவர் : ஸ்ரீதேவி (2-Jan-17, 6:54 pm)
Tanglish : kaadhalan kathali
பார்வை : 826

மேலே