பல விகற்ப பஃறொடை வெண்பா காவேரி நீரின்றி காய்ந்திடும்வி ளைநிலங்கள்
பல விகற்ப பஃறொடை வெண்பா
காவேரி நீரின்றி காய்ந்திடும்வி ளைநிலங்கள்
மாநிலத்தில் ஏராளம் சோறூட்டும் வேளாளர்
சோர்ந்திங்கு வீழ்ந்திருக்க வீராணம் நீர்கொணர்ந்து
கேளிக்கை மைதானம் வீணலுக்கு நீரூற்றி
வேடிக்கை காட்டுவார்கா சிற்கு
03-01-2017