துளிப்பா
சட்டியில் இருந்தால்
அகப்பையில் வரும்
வறுமை
-----------------------------------------------
விழுந்தாலும்
ஓடுகின்றன
நதிகள்
-----------------------------------------------
புத்தனால்
பெருமை பெற்றது
போதிமரம்
-----------------------------------------------
தொடு நிலையிலிருந்து
விலகியே நிற்கிறது
தூரம்
-----------------------------------------------
ஆசைப்பட்டு
தூண்டிலில் சிக்கியது
மீன்கள்
-----------------------------------------------
உழவனின்
நண்பன்

(பாரதி)