அ முதல் ஃ வரை தமிழ் காதல்
அறநெறியானவள்
அளப்பறியா
அன்புகொண்டவள்
ஆருயிரானவள்
ஆண்டாள் போல எனை
ஆட்கொண்டவள்
இனிமையானவள்
இசையின் கீதமாய்
இன்பம் பேசுபவள்
ஈரபார்வையாள்
ஈரம் எனும் நெஞ்சம்
ஈர்த்தவள்
உண்மையானவள்
உள்ளம் கள்ளம் இல்லா
உரிமை கொண்டவள்
ஊர் போற்றும்
ஊண் இலா நெஞ்சம் அவள்
ஊடலில் தெய்வீகம் சொன்னவள்
என்றும் இனிமையானவள்
எதிலும் கலையாய் காண்பவள்
எட்டமுடியா சிந்தனை அவள்
ஏட்டில் காவியமானவள்
ஏமாற்றம் என்னாதவள்
ஏனைய எழுத்தில் வாழ்பவள்
ஐயம் இல்லா நெஞ்சம் அவள்
ஐயா எனும் தமிழை கற்பவள்
ஐந்துஎழுத்துகாதல்சொல்பேசியவள்
ஒவ்வொரு செயலில் அவள்
ஒரு குறை இல்லாதவள்
ஒன்றி கரைபவள்
ஓடம் போல பாடுபவள்
ஓராயிரம் நிலவானவள்
ஓர் ஆலயம் போன்றவள்
ஔவை போல அறிவானவள்
ஔடதம் எனும் காதல் தருபவள்
ஔகம் பாடியவள்
ஃ எனும் எஃகு வாளால் காதலில்
வீழ்த்தியவள்.ஶஶ.