மனிதனாக இரு
மனிதனாக இரு !
வாழ்வில்
வறட்சியைக் கண்டு
வாடி விடாதே!
வாழ்வில்
வளமையைக் கண்டு
துள்ளித் திரியாதே !
வாழ்வில்
வறட்சி உனக்கு
ஒரு பாடம்
வாழ்வில்
வளமை உனக்கு
ஒரு நம்பிக்கை
நினைத்து
நிதானமாக் நடந்தால்
நீ என்றும்
மனிதனாக இருப்பாய் !