பொங்கலோ பொங்கல்
*பொங்கலோ பொங்கல்*
**********************************
மத்திய அரசு பொங்கலுக்கு
விடுமுறை இல்லை என்று சொல்லியது...!
இல்லை இது தமிழருக்கான திருநாள்...
இது எங்கள் உரிமை...
என்று... இன்று போராடுகிறான் தமிழன்..
வாட்சாப்பிலும், பேஸ் புக்கிலும்..
சிலர் வீதியிலும்...!!
நாங்க பொங்கலை கொண்டாடியே தீருவோம்,
என்று....!!!
ஒரு காலத்தில் தைப்பொங்கல் என்பது
உழவருக்கான திருநாளாக இருந்தது...
ஆனால் இன்று...
உழவனாக இருந்தால் சமூகத்தில்
மரியாதை இல்லை என்றானது...
ஏன்னா...
நல்லா படிச்சி
நல்ல டாக்டரா, இஞ்சினியரா வரணும்...
படிக்காதவன் தான விவசாயம் பண்றான்...
இது இன்றைய மக்களின் கருத்து
சாலை போடுகிறோம் என்று
மரத்தை வெட்டினோம்..
பிளாட் போடுகிறோம் என்று
காட்டை அழித்தோம்...
மழை இல்லை, தண்ணீர் இல்லை என்று
தூக்கில் தொங்குகிறான் ஒருவன்...
எப்படி இருக்கும்...
காட்டையும் அதிலிருக்கும் மரத்தையும் அழித்துவிட்டால்...!
இன்று விவசாயம் அழிந்துவிட்டது...
ஆனால்
அவன் ஏற்படுத்திய அந்த
மூன்று நாள் பொங்கல் விடுமுறைக்காக போராடி
வெற்றி பெற்று என்ன
வீதியில் இறங்கியா கொண்டாடப் போகிறோம்..
வீட்டுக்குள் இருந்து
டிவி பார்த்து தானே,
அன்றைய பொழுதை கழிக்கப்போகிறோம்...
தமிழர் பண்பாடு என்பது
வெறும் பொங்கல் விடுமுறையை
கொண்டாடுவது மட்டுமல்ல...
அந்த பொங்கலுக்கு காரணமான
விவசாயத்தையும்...
அதை செய்யும் விவசாயிகளையும்
காப்பதுதான்...
🌾🌾🐂🌳
*அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்*
இவண்
✒க.முரளி (spark MRL K)