விளை நிலங்களைக் காத்திடுவோம் பொங்கல் கொண்டாடுவோம்
நகரத்தின் எல்லைக் கப்பால்
விளை நிலங்கள் எல்லாம்
விலைக்கு போகிறது இன்று
அடுக்கு மாடி கட்டிடங்கள்
நாளை வந்திடும் அங்கு
கிராமங்கள் சுவடு தெரியாது
மறைந்து போகி விடும்
நகரம் சற்றே வளர்ந்து
கிராமங்களை சுனாமிபோல் விழுங்கிவிடும்
உழவர்கள் உழுதல் மறந்து
நகரத்தாரோடு கலந்து விடுவார்
இப்படியே விளை நிலங்கள்
நகரமாய் மாறிவிட்டால்
நாளை உணவிற்கு உள்ளூரில்
தானியங்கள் பற்றாக்குறை
வந்து தாக்கிடும் -அப்போது
இந்த அரசியல் வாதிகள்
செய்வதறியாது திக்குமுக்காடிடுவார்
மக்கள் விழுப்புணர்ச்சியோடு
இன்றே செயல் பட்டால் -இந்த
நிலை வந்திடாமல் தடுத்த்து விடலாம்
உழவர்கள் வாழ்ந்திடலாம்
உழவும் செழித்தோங்கி வளர்ந்திடலாம்
உழவு இருந்தால் அல்லவா உழவர்கள்
உழவும், உழவரும் இல்லாவிடில்
தமிழ் தை பொங்கல் ஏது
பொங்கல் வெறும் இன்சுவை பண்டமாய்
இல்லங்களில் தின் பண்டமாய் மாறிவிடும்
பொங்கல் திருவிழா அல்லவே அது !
விளை நிலங்களைக் காத்திடுவோம்
உழவர் பெருமக்களை வாழ விடுவோம்
உழவும் உழவரும் வாழ்ந்திட்டால்
உணவு பற்றாக குறை ஏது
உணவு இல்லையேல் உயிர் இல்லை
உயிர் வாழ உழவு
உழவுக்கு உழவர்
உழவும் உழவரும் இருந்தாலே
தை பொங்கல் திருவிழா
தமிழர் தனிப்பெரும் திருவிழா
என்று மனதில் கொண்டிடலாமே
இல்லங்களில் பரிமாறப்படலாம்
பொங்கல் திரு விழாவிற்கு
உழவும் உழவரும் என்றும் வேண்டும்
இதை அறிந்து நாம்
விளை நிலங்களை ,நஞ்சை நிலங்களை
காத்திடுவோம்
என்றும் தை மாதத்தில்
பொங்கல் விழா எடுப்போம்
பொங்கலோ பொங்கல்