கானல் நீர்
கவிதை எழுதினேன்
என் கவலை மறந்தேன்
என் கருத்தை சொன்னேன்
அதில் கண்ணியம் காத்தேன்...
மனதில் ஆயிரம் ஆசைகள்
அது தரைமேல் தவழும் அலைகள்
விடியுமா என்றொரு ஏக்கம்
விடியாமலே கலைந்தது தூக்கம்...
காலம் போட்ட கோலம்
தினம் என் வாழ்க்கை
சந்தையில் விடும் ஏலம்
ஊர் விட்டு ஊர் சென்று
உழைத்து மீண்டும் ஊர் சேர
பதினெட்டு மணிநேரம்...
மனதில் அழுகிறேன்
கண்ணீர் தெரியாது
கண்ணீர் வந்தால்
கடல் கொள்ளாது
என்னை படைத்த
கடவுளுக்கு விழியில்லை
அதனால் தான் என்னவோ
நான் வாழ நல் வழியில்லை...
கானல் நீரிலும்
தாகம் தனியலாம்
காகித பூவிலும்
வண்டு மோய்க்கலாம்
கடல் வறண்டு
பாலைவனமாகலாம்
என்று என் வாழ்வில் கவலை
கலைந்து வசந்தம் வருமோ...