அன்புள்ள அவளுக்கு

அன்புள்ள அவளுக்கு..
உன்னிடம் இதயத்தை திருடு கொடுத்தவன்
எழுதும் கடிதம்...
இந்த கடிதம் என் காதலையும்
நீ இல்லாமல் நான் படுகின்ற
தவிப்புகளையும் சொல்வதற்கு
எழுதப்பட்டது அல்ல .....
ஒரு வேளை இந்த கடிதத்தை
நீ படிக்காமல் போனால்
அது நிச்சயமாக என்னிடம் திரும்பி வராது..
இந்த கடிதத்தை உனக்கு அனுப்புகிற போதே
சொல்லித்தான் அனுப்பி இருக்கிறேன்..
என் தேவதை உன்னை படிக்காமல் போனால்
என்னை தேடி நீ அலைய வேண்டாம்,,,
என் கல்லறை அருகில் உனக்கும் ஒரு இடம் வைத்திருக்கிறேன்...அங்கே வந்து அவள் மீதான என் காதலை சொல்லி அழுது கொண்டிரு...

எழுதியவர் : ஆனந்த பிரபு .கௌ (8-Jul-11, 9:04 pm)
Tanglish : anbulla avaluku
பார்வை : 306

மேலே