வெறியை விதைக்காதீர்கள்

கல்லூரியில் மாணவர்கள் பொங்கல் விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்..
அப்போது மாணவர்கள் உற்சாகமாக ஆடிப்பாட திரைப்பாடல்கள் இசைக்கப்பட்டன...

திரைப்பாடல்களை ஒவ்வொன்றாக இயக்கிக் கொண்டிந்தவரிடம் மாணவர்கள் தனித்தனி கூட்டமாக வந்து, " அந்த பாடலைப் போடுங்கள். இந்த பாடலைப் போடுங்கள். ", என்றார்கள்...

ஒரு குழு நெருப்புடா பாடலைப் போட பரிந்துரைக்க, பாடலை இயக்குபவரும் சரியென இயக்க, அந்த பாடல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு குழு மாணவர்கள் வந்து, " இந்தா மொபைலு. எங்க சாதி பாட்டைப் போடு. ", என்றவுடன், நெருப்புடா பாடலை இசைக்க சொன்னக்குழு சண்டைக்கு வர,
சாதிகலவரம் மாணவர்கள் மத்தியில் ஏற்படப்போகிறதென்ற நினைத்த கல்லூரி நிர்வாகம், உடனே, " பசங்க எல்லாம் வீட்டுக்குச் செல்லுங்கள்.
பங்ஷன் அவ்வளவு தான். ", என்று கூட்டத்தைக் கலைத்து விரட்டியது மாணவர்களை..

இந்தியாவின் எதிர்காலத் தூண்களென்று அறிஞர்கள் பலர் வர்ணிக்கும் இந்த மாணவர்கள் சாதி, மதம், என்று துருப்பிடித்துக் கிடக்கிறார்கள்..

இசையில் சாதியைப் பார்க்கும் வெறியை விதைத்தவர்களே,
விதைப்பவர்களே,
திருத்திக் கொள்ளுங்கள் உன் தவறை...
இல்லையெனில் அழிவு உங்கள் சந்ததியினருக்கே....

இது கதை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்வு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jan-17, 7:03 pm)
பார்வை : 553

மேலே