இரண்டு நிமிடம் வாழ்க்கை
உதட்டில் ராக்கெட்டை வைக்கிறேன்
அதன் புகை உள்ளே செல்லுதே
நுரையீரலையும் தாக்குதே
என் மூளைக்கு இது தெரிகிறது
இதை வேண்டாம் என்கிறேன்
ஆனால் மனம் ஏற்க மறக்குதே.....
காற்றை கொண்டு அடைக்கப்ட்ட பையில்
புகையை அடைகிறேன்
காற்றை வெளியில் ஏற்றுகிறேன் கூடவே
என் உயிரையும் ஏற்றுகிறேன்
நீ மெதுவாய் கரைகிறாய்
என்னையும் மெது மெதுவாய் கரைகிறாய்
நீ முன்னாடி செல்கிறாய்
என்னையும் பின்னாடி அலைகிறாய் ...
நான் தீயால் உன்னை கொள்ளுகிறேன்
நீ என்னை புகையால் கொள்ளுகிறாய்
கடைசியில் நீயே வெல்லுகிறாய் ......
என் புகையில்லையே ...............
எங்கள் உயிருக்கு இல்லை விலையே ......
மு.க.ஷாபி அக்தர்

