மாண்புமிகு மாணவ கண்மணிகளுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள்
மாணவர்கள் கையிலெடுத்த எந்த ஒரு பிரச்னையும் தீர்வாகமல் போனதில்லை, மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம், மாணவர்களால் தான் நாட்டை வல்லரசாக்கமுடியும்.மாணவர்களின் இந்த எழுச்சி போராட்டம் வெற்றி பெற வேண்டும் எனில் ஜல்லி கட்டு கோரிக்கையை மாற்றியமைக்க வேண்டும். ஜல்லி கட்டு நோக்கம் நிறைவேற நாம் ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் குறிப்பாக உயிரிழப்போ, உறுப்பு இழப்போ ஏற்படாமல் பாதுகாப்புடனும், கவனத்துடனும் ஜல்லிக்கட்டு நடத்த நாம் ஒப்புக்கொண்டு அதை பரிசீலனைக்கு அனுப்பினால் நிச்சயம் நம் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெரும் வாய்ப்பு மிக மிக அதிகம்..
நம் போராட்டம் ஜனநாயக ரீதியிலும், சட்டத்திற்கு உட்பட்டும்,அஹிம்சை வழியிலும் இருந்தால் நம் போராட்டம் வெற்றி பெரும், நம் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்துக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் மாணவர்கள் கடிதமாக கோடிக்கணக்கில் அனுப்பி முற்றுகையிடுவதாகவும் இருக்கலாம், மேலும் நீதி துறையும், காவல் துறையும் தர கடமையும் சட்ட பொறுப்பும் உடைய உண்ணாவிரதத்திற்கு அனுமதி பெற்றும் அவர்களுடைய பாதுகாப்புடனும் நடத்துவதாகவும் அமைய வேண்டும். காந்திய வழியில் அமைதியுடன் நம் போராட்டத்தை நடத்த வேண்டும்.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை, மனித பிறவி அரிதான பிறவி, அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது, அதனினும் அரிது கூன் குருடு பிரடு நீங்கி பிறத்தல் தான்..ஆகவே தான் இந்த ஜல்லி கட்டு வீர விளையாட்டில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடல் ஊனமாதல் போன்ற மனிதர்களின் நன்மைக்காக இந்த விளையாட்டை உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கிறது. இருப்பினும் மக்களுக்காக தான் சட்டம், சட்டத்திற்க்காக மக்கள் அல்ல, மக்களின் உணர்வுகளையும், பாரம்பரியத்தையும், மரபு, பழக்க வழக்கங்களையும் உள்ளடிக்கியது தான் சட்டம். அவைகளை கடைபிடிக்க சொல்வதும் தான் சட்டம். அவைகள் மீறப்படும் போது சட்டத்தில் மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டுவர வைப்பதற்கு நாம் ஜனநாயக ரீதியில் போராடி வெல்வதும், நம் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் உரிமை, கடமைகளை வரையறுத்து தந்துள்ள நம் நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் ஆணி வேறாக விளங்கும் அரசியலமைப்பு சட்டம் தான்..
சட்டத்திற்கு அரசியலமைப்பு ரீதியில் தான் நாம் தீர்வு காண வேண்டும். நம் நாட்டின் அனைத்து நீதி மன்றங்களுக்கும் ஒரே தலைமை நீதி மன்றம் உச்ச நீதிமன்றம் தான்.நம் நாட்டின் முதற் குடிமகனாக குடியரசு தலைவர் முதல், கடைக்கோடி குடிமகன் வரை ஏன் பிரதமராக இருந்தாலும் கூட சட்டத்தின் முன் அனைவரும் சமம். அவர்களால் மாற்ற முடியாத சட்டங்களை கூட மக்கள் சக்தி, ஜனநாயக போராட்டங்கள் மாற்றிவிடும்.ஆகவே மாணவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். குறிப்பாக பல்வேறு விவசாயிகள் உயிரிழக்கவும் காரணமாக அமைந்த காவிரி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தின் ஆணையை உடனடியாக நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வந்த கர்நாடக அரசின் போக்கை எதிர்த்தும், உச்சநீதி மன்றத்தின் ஆணையை செயல் படுத்த கோரியும் நடந்திருக்குமேயானால் மாணவர்களின் போராட்டம் இருந்திருந்தால் ஒரே நாளில் தீர்வும் வெற்றியும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமேயில்லை...
சமூக வலைத்தளங்களின் தேசிய கொடியை தலை கீழாக பறக்க விட வேண்டும் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றெல்லாம் செய்தி வருகிறது. அதுபோல என்றுமே நடந்து கொள்ள நினைக்க கூடாது..தேசிய கொடியை வணங்குவதும், தேசிய கீதத்தை மதித்து நடப்பதும் நம் உயிர் இருக்கும் வரை பின்பற்ற வேண்டும்..அரசிலமைப்பு தந்த எல்லை இல்லா அதிகாரத்தை நாம் சட்ட ரீதியாக பயன்படுத்தி நாட்டை வல்லரசாக்க பாடுபட வேண்டும். நம் நாட்டு கொடியை நாம் மதிக்காமல் போனால் அயல் நாடுகள் நம்மை மதிக்காது. ஆகவே நாட்டிற்க்காக என்றும் நம்மை அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும்.