நட்புக்கவிதை...

வஞ்சமில்லாதவன் கவிஞன்..
வார்த்தையில் பஞ்சமில்லாதவன் கவிஞன்..

சொல்லாலே கரம் நீட்டும் அவன் நெஞ்சம்
அவன் சொல்லாலே கரையும் கல் நெஞ்சம்

கவி அவனுக்குள் தஞ்சம்...
அவன் விலை இல்லா பசுந்தங்கம்..

கொடுத்தாலும் குறையாத ஊற்று..
அது கரைத்தாலும் கரையாத கல்வெட்டு..

அவன் வெள்ளை மனதிலே கவி ஊற்று..
அது வெள்ளை பாலோடு தேன் ஊற்று..

சொல்லாலே அவன் கொடை வள்ளல்..
சொல் ஊரிலே அவன் கவி மன்னன்..

நட்புக்கு அவன் கவி மனு கொடுக்கும்..
கவி மனம் கடல் தாண்டியும் தடம் பதிக்கும்..

எழுதியவர் : தோழி... (9-Jul-11, 12:30 pm)
பார்வை : 2242

மேலே