அசுத்தம் - Unclean

அசுத்தம்

பொன் குலேந்திரன் கனடா


தர்மசீலன் சிறுவயது முதற்கொணடே அவ்வளவுக்குச் சுத்தம் பார்ப்பவன் அல்ல. அதைக் கண்டு அவன் அம்மாவோ அப்பாவோ அவனைக் கண்டித்து வளர்க்கவில்லை. தர்மன் ஒரு மகனானபடியால் அவனுக்கென வீட்டில் தனி அறை கொடுத்திருந்திருந்தார்;கள். ஆனால் தர்மாவின்; அறைக்குள் போனால் ஒரே நாற்றம் என அம்மா அடிக்கடி குறைப்படுவாள்; அறை முழுவதும் ஒரே குப்பை என்பாள்.;

“ ஏண்டா தர்மா உன் அறை ஜன்னலைத் திறந்து வையேன். வெய்யில் வரட்டும். காற்றோட்டம் இருக்கட்டும். மேசையிலை புத்தகங்களைப் பரப்பி வையாதே. புத்தகம் வைக்க ஒரு அலுமாரி உனக்கென்று ஒன்று இருக்கிறது. அதில் அழகாகப் புத்தகங்களை அடுக்கி வைத்தால் தான் குறைந்தா போவாய்? எப்பவும் அம்மா அவனை நச்சரித்தபடியே இருப்பாள்.

தர்மசீலனின் அம்மா மைதிலி நுணுக்கமாக சுத்தம் பார்ப்பவள். தினமும் பல தடவை கைகளை அடிக்கடி சோப்பு போட்டு களுவுவாள். ஏன் அப்படி களுவுகிறாய என்று கேட்டாள். “சரியாக கழுவாமல் விட்டால் தொற்று நோய் வந்துவிடும்” என்பாள்.

தர்மசீலன் குளிப்பதற்கு கள்ளம். தலை முடி வெட்டமாட்டான். ஹப்பியைப் போல் வளர்த்திருப்பான். முகச்சவரம் செய்யமாட்டான். தன படுக்கையை துப்பரவாக வைத்திருக்கமாட்டேன். எண்;ணை படிந்த தலையணை உறையை அம்மாவை மாற்ற விடமாட்டான். படுத்து ஏழும்பிய பின் பெட்சீட்டை மடித்து வைக்கும் பழக்கம் தர்மாவுக்கு இல்லை. சாப்பிட்ட பின் பீளெட்டை களுவிவைக்கமுhட்டான். அதையும் அவன் அம்மா தான் செய்வாள். அவன் அப்பாவும் அம்மாவைப் போல் சுத்தம் பார்ப்பவர்.

“ எப்படி மைதிலி உன்வீட்டை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறாய்”? என்று வீட்டுக்கு வருபவர்கள் கேட்பார்கள்.

“ அதெல்லாம் எனக்குச் சிறுவயது முதற்கொண்டே என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்த பழக்கம். என் கணவரும் சுத்தம் பார்ப்பவர். ஆனால் அந்த சுத்தமாக இருக்கும் பழக்கத்தை என் மகன் தர்மனுக்கு நான்இ எவ்வளவோ சொல்லிக் கொடுத்தாலும் அவன் சுத்தமாக தன் அறையை வைத்திருக்கிறான் இல்லை. குளிப்பதுக்கு கள்ளம். உடுப்பை அடிக்கடி மாற்றமடாட்டான்.” இப்படி தர்மனைப் பற்றி தன் சினேகிதி ராஜத்துக்கு முறையிடுவாள்:

“ மைதிலி உன் மகன் சுத்தம் இல்லாவிட்டாலும் அவன் பெயருக்கு ஏற்ற நல்ல இரக்கச் சுபாவம் உள்ளவன். நல்ல கள்ளம் கபடமற்ற சுத்தமான மனம் அவனுக்கு. பல விஷயங்களில் அவதானித்திருக்கிறேன்” என்றாள் ராசம்; மாமி.

*******
அன்று வெள்ளிக்கிழமை. அம்மா முருகன் கோவிலுக்கு போகும் தினம். தர்மாவையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றாள். போகமுன் கட்டாயப்படுத்தி அவனை குளிக்கச்செய்து, தான் வாங்கித் தந்த புது வேட்டியையும் லண்டனில் இருந்து அவனது பிறந்த நாளுக்கு அவன் மாமா ஆனுப்பிய சேர்;டையும் அணியச் செய்தாள். கையில் மாமா அனுப்பிய விலை உயர்ந்த பிரமிட் கைக்குட்டை வேறு அவனக்கு.

“ஏன் அம்மா எனக்குக் கைக்குட்டை”? என்று அவன் தாயைக் கேட்டான்

“கோவிலில் கால்முகம் கழுவி கோவிலுக்குள் போகமுன் துடைக்க பாவிப்பதுக்கு. அதோடு பிரசாதம் உண்ட பின் கையை துடைக்கத்தான். இல்லாட்டால் வேஷ்டியில்; துடைப்பாய் அது விலை உயர்ந்த வேஷ்டி”, என்றாள் மைதிலி

கோவிலுக்குள் போகமுன் வீதியில்; ஒரே பிச்சைக்காரக் கூட்டம் “ ஆம்மா தாயே ஏதாவது hரமம் செய்யம்மா என்று கூவியபடி வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.. கால இழநுதவரகள் இ கையிழநதவரகள் குருடகைள் அங்கங்கள் குறைநதவரகள்இ சிறுவர்கள் நிறைந்து இருந்தனர் தர்மன் தான் சேர்த்து வைத்திருந்த சிலரைகளை உவ்வோரு பிச்சைக்காரனுக்கும் கொடுத் வந்தான். அவன் செயல் சிலர் அவன் கையை தொட்டு கும்பிட்டார்கள். தாவுக்கு இது அருவுருப்பாக இருந்தது. அசுதடதமான இந்த பிச்சைகாரரகளுக்கு இவன் ஏன் சில்லரை போடுகிறான்? என்று தங்கள் கூடவே கோவிலுக்கு வந்த ராஜம் மாமிக்கு முறையிட்டாள் மைதிலி.

“ அது அவன் குணம். ஆவன் இஷ்டப்படி பிச்சைப் போடட்டும் அவனைத் தடுக்காதே மைதிலி”, என்றாள் ராஜம் மாமி.

திடிரேன்று வரிசையில் இருந்த ஒரு தொழுநோய் பிசசைக்காரனைப் பார்த்து

“ அட சின்னையா, நீயா இந்தக் கோலத்தில்? உனக்கு என்ன நடந்தது? ஏன் இந்தக் கோலம். எங்கிருந்து இந்தக் குஷ்ட வியாதி உனக்கு வந்தது”? இரக்கத்தோடு தர்மன் அவன் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு காலத்தில் காவலாளியாக இருந்த சின்னையாவை பாரத்துக் கேட்டான். தர்மசீலன். அவனை ஒரு காலத்தில் அழகானவன் என்று மாணவ மாணவிகள் வர்ணித்தது தர்மாவின் நினைவுக்கு வந்தது.

“ அதை எப்படி என் விதியைச் சொல்ல தம்பி? எல்லாம் நான் பழகிய தீய குணம் உள்ள நண்பர்களால் தான் எனக்கு இந்த நிலை வந்தது. அவர்கள் நட்பால்மூ; விபசாரிகளோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பினால் வந்த விளைவுதான் இந்த நோய். எல்லோரும் என்னை அசுத்தாமானவன்இ தீண்டப்படப்படாதவன் என்று தள்ளி வைக்கிறார்கள். ஒருகாலத்தில் அழகானவன் என்று பலரால் வர்ணிக்கப்பட்டது என் தோற்றம் தோழுநோயால் இந்த நிலை அடைந்துவிட்டது” என்றான் சின்னையா. அவன் முகத்திலும் கைகளிலும் இருந்து சீழ் வடிந்துகொண்டிருந்தது. முகம் பார்ப்பதற்கு அகோரமாக இருந்தான்.

தர்மாவின் அம்மா அருவருப்பினால் தூர விளகி நின்றபடி “ ஏடெய் தர்மா கதைத்தபோதும் வா கோயிலுக்கு நேரமாயிற்று என்று சத்தம் போட்டாள். தர்மன், தாய் சத்தம் போட்டதைக் கேட்காதவாறு தன் புதுக் கைக்குட்டையை சின்னையாவிடம்; கொடுத்து, தன் கையில் மிகுதி இருநு;த எல்லாக் காசையையும் அவனிடம்; கொடுத்து

“ இதை வைத்துக்கொள் சின்னையா. முதலில் உன் முகத்திலும் கையிலும் இருந்து வழியும் சீழை இந்த கைக்குட்டையால் துடை” என்றான் தர்மன்.

அந்தப் பிச்சைக்காரன் சினனையன், தர்மன் கொடுத்த தர்மத்தை வாங்கியபடி, அவனின் இரு கைகளை இறுக்கப்பற்றிக், கொஞ்சி உன் மனம் எவ்வளவு சுத்தமானது. நீண்ட காலம் வாழ்வாய் தம்பி” என்று வாழ்த்தினான்.

“ அம்மா வா கோவிலுக்குப் போக நான் ரெடி“ என்றான் தர்மா.

“ கோவிலுக்குப போகமுன் அந்தத் தொழுநோயாளியை தொட்டு, உன்னை நீ அசுத்தப்படுத்திவிட்டாய் தர்மா. வா வீட்டுக்குத் திரும்பிப் போய் நீ முதலில் குளித்த பிறகு கோவிலுக்கு வருவோம் என்றாள் தர்மாவின் தாய் மைதிலி;.

ராஜம் மாமி மௌனமாக நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றாள். எது சுத்தம் எது அசுத்தம் என்றது அவள் மனம்



*******

எழுதியவர் : பொன் குலேந்திரன் கனடா (26-Jan-17, 6:45 am)
பார்வை : 409

மேலே