காதல் சாதி

காதல் என்ன பொழுதுபோக்கா
உன் கண்கள் என்ன பொய் சொல்லுமா<
நாம் வாழ்ந்த நாட்கள் நடைபோடுமா
உன் மனம் என்ன தடை பேசுமா...

காதல் சொன்னேன் உயிரே உன்னோடுதான்
உனக்கு என்ன ஆச்சு மனமே
என் கண்ணோடுதான்
காதல் தொட்டேன் உன்
மெய்யோடுதான்...

வாழும் வாழ்கை உன்னோடுதான்
நான் தொட்டால் நீ அலையானாய்
என் மேல் வீசி காதலானாய்
வருடம் வசநந்தமானது
நம் காதல் மலரந்த உறவானது

திருமணம்  எப்போழுது
நான் கேட்டால் உன் நிலை மாறுது
அடிப்படை உயிராய் நாம் பிறந்தோம்
மதம் ஒன்று இந்தியனாய்
மானம் கொண்ட தமிழனாய்

சாதி பேசும் காதலால் மீதி வாழ்வு
நெருப்பானது
நீதி கேட்டு மனம் சிலையானது
உன் மனம் மவுனமானது
காதல் இங்கே புயலானது...

தாய் தந்தை நம்மை நோக்க
சம்மதம் தர நாம் பேச
கண்ணீர் கொண்டு நான் சொல்ல
கானல்நீராய் நீ நிற்க்க
எங்கே செல்லும்  என் வாழ்கை....

எழுதியவர் : சிவசக்தி (27-Jan-17, 12:04 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kaadhal saathi
பார்வை : 435

மேலே