முதல் முத்தம்

உருகும்
மெழுகின் ஒளியில்
உன் மிளிரும்
மேனி அழகில்
உறுமும் புலியும்
உருகும்
மெழுகென உருகும்
உடையும்
தவம் நொடியில்
உனது கார்மேக
கூந்தல் நெடியில்
உருளும்
வேர்வை துளியில்
உஷ்ணம் தணியும்
தருணம்
உடலும்
உணர்வும்
உயிரில் கரைய
உன் உதட்டில்
என் முத்தம்
முதல் முத்தம்