ஏங்கிய மனசு

ரோஜாக்களிடயே மோதல்
உன் கூந்தலில் அமர்ந்து வாழ
ராஜாக்களிடயே மோதல்
உன் காதலை பெற்று வாழ
தென்றலுக்கும் ஆசை உன்
முகத்தோடு மோதி பார்க்க
பிரம்மனுக்கும் ஆசை
தன் படைப்பை மீண்டும் பார்க்க
உன் பார்வைபட்ட பாலை சோலையானது
உன் பாதம்பட்ட மணல் முத்தானது
இத்தனை அம்சங்களையும் பெற்ற
உன் கரம்பிடிக்க யாருக்கு அதிர்ஷ்டமோ....ம்ம்ம்ம்ம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (27-Jan-17, 10:30 am)
Tanglish : yengiya manasu
பார்வை : 593

மேலே