காதல் வலி - 51

இவள்
தலையில் பூச்சூடி
நடந்துவரும் ஆத்திச்சூடி

இவளைக்கண்டிருந்தால்
அவ்வையார் ஆத்திச்சூடிக்கு பதில்
அழகுச்சூடி எழுதியிருப்பார்

அழகுச்சூடி

அழகை விரும்பு
ஆத்திரம் கொள்ளாதே
இயன்றவரை காதலி
ஈயைப்போல் பின்தொடர்
உதைகூட கிடைக்கலாம்
ஊக்கமது கைவிடேல்
எண் பெண் இரண்டும் ஒன்று
ஏட்டு கணக்காய் எண்ணுவது நன்று
ஐயம் வேண்டாம்
ஒருத்தியை மட்டும் காதலி
ஓதாமல் இருந்தாலும் பின்னால் போகாமல் இருக்காதே
ஒளவை வயதானாலும் அன்புடன் காதல் வை
அஃதே உண்மைக்காதல்

எழுதியவர் : குமார் (27-Jan-17, 8:05 pm)
பார்வை : 1055

மேலே