காதல் வலி - 50

நான் அவளைப் பார்த்த
நாள் முதல்
கி . மு என்றால்
கிறிஸ்து பிறப்பதற்கு முன் அல்ல
கிளியோ பாட்ரா பிறப்பதற்கு முன்னால்
கி .பி என்றால் கிளியோ பாட்ரா பிறந்த பின்னால்
என்றே அர்த்தம் விளங்கியது

இவள் கடையில் சீரகம் வாங்கும்போதெல்லாம்
சீரகத்திற்கு பதில் சீரான அகத்தையும்
வசீகரத்தையும் வாங்கிவந்தாள்போலும்

அனைவரும் நிலவைப் பார்த்து
ரசித்துக்கொண்டிருக்க
நான் மட்டும் இவள்
நிழலைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்

பெரியார் கடவுள்
இல்லை என்றார்
இவள் காதல்
இல்லை என்கிறாள்

நாம் என்றால்தான் உதடு
ஒட்டும் என்கிறேன்
அவள் போ என்றாலும்
ஒட்டும் என்கின்றாள்

இவள் ஏவாளின் மகள்
எலிசபெத்தின் நகல்
மேனகையிமிருந்து தெறித்தத் துகள்
கருவறையில் ஏற்றிவைத்த அகல்
இவள் விழித்திருக்கும் நேரம்தான்
எனக்குப் பகல்

இவள்
தமிழ்நாட்டில் பிறந்த
செங்கோட்டை
நான் இவளைக் கட்ட நினைக்கும்
ஷாஜகான்

புற ஊதாக் கதிர்கள்
இவளைத் தொட்டுப்பார்க்கவே
ஓசோனில் ஓட்டைப் போட்டன

எழுதியவர் : குமார் (26-Jan-17, 5:07 pm)
பார்வை : 1556

மேலே