அறுவடை

அறுவடையின் மகிழ்ச்சிதனில்
----- ஆழ்ந்திடுவான் விவசாயி .
மறுபிறப்பும் நெல்வயலே !
------ மகத்துவமும் உழைப்பன்றோ ?
விறுவிறுப்பாய்க் களஞ்சியமாய்
------ விதைநெல்லும் சோறாகும் .
வறுத்தெடுக்கும் வெயில்கூட
------ வணங்கிடுமே வயல்நோக்கி !!!


செழித்திட்டச் செந்நெல்லைச்
------ செம்மையுடன் கட்டாக்கி
வழிதோறும் உழைப்பாளர்
------ வகையாகத் தலைமேலே
பழங்கதைகள் பேசிக்கொண்டு
------ பக்குவமாய்த் தூக்கிக்கொண்டு
அழிக்காது அகலாது
------ ஆக்கத்தைச் சமைத்திடுவர் !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Jan-17, 10:46 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 103

மேலே