பிரியாத நட்பு

வளையாத பாதை இல்லை
வலிக்காத காதல் இல்லை
உழைக்காத உயர்வு இல்லை
உறங்காத கண்களில்லை
மாறாத துன்பமில்லை
ஆறாத ரணமுமில்லை
முடியாத பகையுமில்லை
சேராத சொந்தமில்லை
விடியாத இரவுமில்லை
வற்றாத நதியுமில்லை
அனால் உலகத்தின் எங்கோ ஒரு
மூலையில் பிரியாத நட்பு
இன்னும் வாழ்ந்துக்கொண்டு
தான் உள்ளது அது போல் நம்
நட்பு என்றுமே பிரிவதில்லை..

எழுதியவர் : செல்வமுத்து .M (28-Jan-17, 11:23 am)
Tanglish : piriyadha natpu
பார்வை : 753

மேலே