குமாருக்கு ஒரு நாள் திருநாள்

குத்து மதிப்பாய்
வாழ்பவனல்ல குமார்...
குறி பார்த்துக் கொள்கையோடு
வாழ்பவன் குமார்...

இவன் ஒரு
அறிவுப் பெட்டகம்
ஆலோசனைக் கருவூலம்
கோபத்தில் படுகஞ்சன்
அன்பில் பெருவள்ளல்...

பழைமையும் புதுமையும் சேர்ந்த
அதிசயக் கலவை இவன்...
நவீன நாகரிகம்... இன்றைய
கல்லூரி மாணவன் இவனிடம்
கற்றுக் கொள்ளலாம்...
பண்டைய கலாச்சாரம்... இன்றைய
தொண்ணூறு தாண்டும்
பெருசுகளும் இவனிடம்
பெற்றுக் கொள்ளலாம்...

இவன் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடி மட்டுமல்ல
செயல்பாடுகளும் அளந்து
வைக்கப் படுவதாய் அமையும்
அதில் அர்த்தங்கள்
ஆயிரம் இருக்கும்...

நிறையப் பொறியாளர்கள்
படித்து முடித்த பத்தாண்டுகளுக்கு
என்ஜினியரிங் பொருட்கொள்முதல்
கட்டுமானம் ஆகியவற்றில் பயிற்சி
எடுத்துக் கொண்டிருந்தபோது
முதல் ஆறு ஆண்டுகளுக்குள்
கல்யாண மண்டபங்களையும்
கல்லூரிக் கட்டிடங்களையும்
வணிக வளாகங்களுக்கு
அடுக்கு மாடிகளையும்
மர அறுவை மில்களையும்
குடியிருப்பு பங்களாக்களையும்
வாடிக்கையாளர்களுக்கு
அற்புதமாய்க் கட்டிக் கொடுத்த
கெட்டிக்காரன் இவன்...

பழைமையின் அருமை
இவன் தினம் அனுப்பும்
காலண்டர் தாள் சொல்லும்...
புதுமையின் அவசியம்
இவன் பயன்படுத்தும்
ரிலையன்ஸ் ஜியோ ரீங்காரமிடும்..

பிரமன் படைத்த
இந்த மனிதக் கணினி
அவ்வப்போது தன்னைத்தானே
புதுப்பித்துக் கொண்டு
சிக்கலான விஷயங்களுக்கும்
எளிமையாய் எழுதும்
கணினி நிரல் கண்டு
பிரமனே பிரமித்துப் போவான்..

குமாரின் தாய் அன்புடன்
பரிமாறி நான் உண்ட
நினைவுகளில்..
குமாரின் பிறந்தநாள்
மகிழ்ச்சி என்னையும்
தொற்றிக் கொண்டது...
உற்சாகம் நெருப்பாய்ப்
பற்றிக் கொண்டது...
அதில் என் மனம்
ஆனந்தம் கொண்டது...

ஒவ்வொரு பிறந்தநாளிலும்
குமாரைப்பற்றி எழுதுவதற்கும்
ஒவ்வொரு ஆண்டிலும்
குமாரிடமிருந்து
தெரிந்து கொள்வதற்கும்
விஷயங்கள் இன்னும்
நிறையவே இருக்கிறது
கணக்கில் அடங்காமல்...

வாழ்வியல் புத்தகங்கள்
இவனுக்குக் கற்றுக்கொடுத்த
விஷயங்கள் உண்டு...
இவனது வாழ்வியலில்
புத்தகங்கள் பெற்றுக்கொள்ள
வேண்டிய அருமையான
விஷயங்களும் உண்டு...

பிறந்தநாள் காணும் குமார்
உன்முன் நானெல்லாம் சுமார்...
குமார்..என் இனிய நண்பனே...
வாழ்க பல்லாண்டு!
என்றும் வளத்தோடு!!
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்!!!
👍🙏🍫🎂🍰🌺🌷🌹🙋🏻‍♂😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (28-Jan-17, 3:01 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 230

மேலே